திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில்:

திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில்:
        திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில் தான் கற்பக விநாயகர் கோவில்.
எங்கு உள்ளது:
       இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பட்டி என்ற ஊரில் உள்ளது.
எப்படி செல்வது: 
              இக்கோவிலுக்கு சிவகங்கை மாவட்ட்டத்தில் உள்ள திருப்புத்தூர் என்ற ஊரில் இறங்கி காரைக்குடி செல்லும் சாலையில் பிள்ளையார் பட்டி என்ற ஊர் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
         இத்திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர் பெயர்:
        இக்கோவிலில் உள்ள மூலவர் விநாயகர் ஆவர் . அவர் பெயர் கற்பக விநாயகர்.
ஸ்தல பெருமை:
      முருக பெருமானுக்கு எப்படி அறுபடை வீடு உள்ளதோ அதேபோல் விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. இது ஐந்தாவது படை வீடாகும்.
கோவில் பெருமை:
       இந்த கோவிலில் விநாயகர் மூலவராக கருதப்படுகிறார். மேலும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று சுமார் பதினெட்டு படி அளவில் ராட்சத கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்வது வழக்கம்.
வேண்டுதல்கள்:
         இந்த கோவிலில் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். மேலும் இந்த கோவிலில்  பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்த்திரம் சாற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
ஸ்தல விருக்ஷம்:
       இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷம் மருத 
மரம்.

நவகிரஹ தோஷங்கள் நீங்கவும் கடன் தொல்லை நீங்கவும் வழிபட வேண்டிய கோவில்:: சூரினார் கோவில்.

நவகிரஹ தோஷங்கள் நீங்கவும் கடன் தொல்லை நீங்கவும் வழிபட வேண்டிய கோவில்:

       நவகிரஹங்கள் தோஷங்கள் அனைத்தும் போகவும் வாழ்வில் செல்வம் செழிக்கவும் வழிபட வேண்டிய கோவில் தான் சூரினார் கோவில். 

எங்கு உள்ளது:

         இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோவில் என்ற இடத்தில் உள்ளது.

எப்படி செல்வது:
              இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பேருந்துகள் உண்டு. கும்பகோணத்தில் இருந்து திருமங்கலக்குடி காளி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 


சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

             இங்குள்ள சிவ பெருமான் சிவசூரியன் என்றும் அம்பாள் உஷாதேவி, சாயாதேவி என்ற பெயர் கொண்டும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

ஸ்தல சிறப்பு :

           இந்த கோவிலில் ஏழரை சனி , அஷ்டமத்து சனி மற்றும் கிரக தோஷங்கள் யாவும் விலக இங்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

        முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவர் மிக சிறந்த பக்திமான் ஆவர். அவருக்கு தொழு நோய் ஏற்பட்டது. அதனால் இங்குள்ள நவகிரஹங்கள் அனைத்தையும் வேண்டி தவம் மேற்கொண்டார். நவகிரஹங்களும் முனிவருக்கு காட்சி தந்து தொழுநோயை இருந்து விடுவித்தது. இதனை கண்ட பிரம்மா கோபம்
கொண்டார். 

            பூலோகத்தில் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் தான் அவரவர் வாழ்வு அமையும். ஆதலால் என் காலவ முனிவருக்கு நோயிலிருந்து விடுதலை அளித்தீர்கள் என்று நவகிரஹங்களுக்கு அந்த நோய் பற்றி கொள்ளுமாறு சாபம் கொடுத்தார். பிறகு நவகிரஹங்கள் அனைத்தும் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொண்டு சாப விமோசனம் பெற்று கொண்டதால் இந்த தளத்தில் நவகிரஹங்கள் அனைத்திற்கும் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது வரலாறு.

சூரியனின் தோற்றம்:

        சூரியனுக்கு இரண்டு இடத்தில் மட்டுமே கோவில் உண்டு. ஒன்று சூரியனார் கோவில் மற்றொன்று கோனார்க் கோவில். இங்கு சூரியன் சாந்தமாக தனது இரு மனைவியருடன் காட்சி தருகிறார்.

தோஷம் நீங்க:

           இங்கு தோஷங்கள் யாவும் நீங்க பன்னிரண்டு ஞாயிறு கிழமை இந்த கோவிலுக்கு வந்து நீராடி மனதார வணங்கினால் தோஷம் யாவும் விலகும் என்பது ஐதீகம்.

வேண்டுதல்கள்:

           இந்த கோவில்களில் நவகிரஹ தோஷத்திற்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சக்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து அன்னதானம் செய்கின்றனர்.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

         இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக வெள்ளெருக்கு உள்ளது. மற்றும் திருக்குள தீர்த்தமாக சூரிய தீர்த்தம் உள்ளது.

விஷேஷ தினங்கள்:

     ரத சப்தமி மற்றும் தை மாதம் பத்து நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

சீமந்தம் மற்றும் வளைகாப்பும் அதன் பயன்களும் :

Image result for valaikappu images


சீமந்தம் மற்றும் வளைகாப்பும் அதன் பயன்களும் :

          சீமந்தம் மற்றும் வளைகாப்பு கர்ப்பிணி பெண்ணிற்கு நடத்தப்படும் ஒரு விழா ஆகும். இந்த விழாஆனது கருவில் குழந்தையை சுமக்கும் பெண்ணை தனித்துவமாக காட்டுவதற்காகவும் அந்த பெண்ணின் மனம் குளிரவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.
         இந்த நிகழ்ச்சி இந்தியா போன்ற கலாச்சாரம் மிகுந்த நாடுகளில் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி   ஆகும்.
Image result for valaikappu images

எதற்காக வளைகாப்பு:

          வளைகாப்பு என்பது அறிவியல் ரீதியாக பிறக்கப்போகும் குழந்தைக்கு செவி வளம் அதிகமாக வர வளைகாப்பு அணிவிக்கின்றனர். இந்த வளைகாப்பு என்பது நம் முன்னோர்கள் கூறியதாவது கர்ப்பிணிகளுக்கு பிரசவம் இனிது நடக்க வளையல் அணிவிக்கின்றனர்.Image result for valaikappu images
எப்போது செய்வது:

         இந்த வளைகாப்பு என்பது கருவுற்ற மாதத்தில் இருந்து ஐந்து ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் நடத்தப்படும் ஒரு விழா ஆகும். மேலும் இந்த வளைகாப்பின் போது கர்ப்பமான பெண்ணிற்கு மணமகள் போன்று அலங்காரம் செய்து பிறகு தான் வளைகாப்பு போடா வேண்டும் . அப்படி வளையல் போடும்போது முன்னரே குழந்தைகளை பெட்ரா பெண் தான் வளையல் போட வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமான பெண்ணிற்கு இரண்டு வளையல் போட்டு தானும் அணிய வேண்டும். 


வளைகாப்பு முடிந்ததும்:


          கருவுற்ற பெண்ணிற்கு வளைகாப்பு போட்டதும் பெண் அவளின் தாய் வீட்டிற்க்கு செல்ல வேண்டும். ஏனெனில் வளைகாப்பு போட்ட பெண் அவளின் வீட்டிற்கு சென்றால் அவள் பயம் இல்லாதவளாய் இருப்பாள். அது அவளின் பிரசவத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பது ஐதீகம்.கேது தோஷம் போக்க வழிபட வேண்டிய கோவில் :: கீழப்பெரும்பள்ளம்

Image result for kethu imagesகேது தோஷம் போக்க வழிபட வேண்டிய கோவில் :

        கேது தோஷம் போக்கிட வழிபட வேண்டிய கோவில் தான் நாகநாத ஸ்வாமி கோவில் கீழப்பெரும்பள்ளம் .

எங்கு உள்ளது:

   இந்த கோயில் கீழப்பெரும்பள்ளம் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

       இக்கோவிலுக்கு சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வழியே பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. பூம்புகார் செல்லும் சாலையில் தர்மகுளம் என்ற ஊர் உள்ளது.அங்கு தான் பேருந்து நிறுத்தம்உள்ளது .  அதில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் .

Image result for naganatha swamy imagesஸ்வாமி மற்றும் அம்பாள் பெயர்:

          இங்குள்ள சிவ பெருமான் நாகநாத ஸ்வாமி என்றும் அம்பாள் சௌந்தர்யனாயகி என்ற பெயருடனும்          அழகுற காட்சி தருகின்றனர்.

கோவில் சிறப்பு:

           இந்த கோவிலில் கேது தோஷம் போக பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

              கேது என்பவர் அரக்க குலத்தை சேர்ந்தவர் ஆவார். பாற்கடலில் அம்ரிதத்தை கடையும் போது மஹாவிஷ்ணு மோகினியாக மாறி தேவர்களுக்கு அகப்பையால் ஊற்றி கொடுத்து கொண்டு இருந்தார். கேது அமிர்தம் உன்ன ஆசைப்பட்டு தேவர்களில் ஒருவராக மாறி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்து அமிர்தம் வாங்கி உண்டான். இதனை கண்டு சூரியன் மற்றும் சந்திரன் மகாவிஷ்ணுவிடம் கூறிவிட்டனர். பின்பு கோபம் கொண்ட மஹாவிஷ்ணு தனது கையில் உள்ள அகப்பையை  கொண்டு கேதுவின் தலையில் அடித்தார். உடனே கேதுவின் தலை வேறு உடல் வேறு ஆனது. அமிர்தம் உண்டதால் கேதுவின் உயிர் மட்டும் இருந்தது. பின்பு தான் செய்த தவறினை புரிந்து கொண்டு சிவ பெருமானிடம் முறையிட்டார். சிவ பெருமானும் கேதுவை ஐந்து தலை நாகமாக செம்மை நிறமாக மாற செய்துவிட்டார்.

கோவில் வரலாறு:

        பாற்கடலில் அமிர்தம் கடைய மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்ற நாகத்தினை கயிறாகவும் கொண்டு அமிர்தம்  கடைந்தனர். அப்போது வலி தாங்க முடியாமல் வாசுகி நஞ்சு கக்கியது. நஞ்சினால் அமிர்தம் யாவும் நஞ்சாகிவிடும்  என்று எண்ணி சிவ பெருமான் அந்த நஞ்சினை உண்டு அந்த வாசுகி என்ற நாகத்தினை தூக்கி வீசினார். பிறகு வாசுகி நாகம் சிவ பெருமான் நஞ்சு உண்டதற்கு தான் தான் காரணம் என்று எண்ணி சிவ பெருமானை நோக்கி தவம் செய்தது. பிறகு சிவ பெருமான் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார். எனக்கு காட்சி கொடுத்த நீங்கள் இனிமேல் இந்த தளத்தில் நாகநாதசுவாமி என்று பெயர் கொண்டு தன்னை காண வரும் பக்தருக்கு அருள்புரிய வேண்டும் என்று கூறியது. சிவ பெருமானும் அவ்வாறே இந்த இடத்தில் வாசம் பெற்றார்.


Image result for naganatha swamy images

கோவில் அமைப்பு:

      இந்த கோவிலில் ராஜ கோபுரம் கிடையாது. சிவ பெருமான், அம்பாள், சூரியன், சந்திரன், சனி பகவான் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

கேது அமைப்பு:

       இந்த கோவிலில் கேது பகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார். கேது பகவான் ஐந்து தலை நாகத்தின் தலையும், மனித உடலும் கொண்டு கைகளை கூப்பி வணங்குவது போன்று காட்சி தருகிறார்.

வேண்டுதல்கள்:

       இக்கோவிலில் அதிகமாக கேது தோஷம் போக்கவே பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாள் மற்றும் கேதுவிற்கு அபிஷேகம் செய்தும் அர்ச்சனை செய்தும், தீபம் ஏற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.


புண்ணியம் கிட்டிட வழிபட வேண்டிய கோவில் :: அமிர்தகடேஸ்வரர் கோவில் சாக்கோட்டை.

புண்ணியம் கிட்டிட வழிபட வேண்டிய கோவில் :: அமிர்தகடேஸ்வரர் கோவில் சாக்கோட்டை.

Image result for amirthakadeswarar temple images


புண்ணியம் கிட்டிட வழிபட வேண்டிய கோவில் :

          புண்ணியம் கிட்டிட வழிபட வேண்டிய கோவில் தான் அமிர்தகடேஸ்வரர் கோவில் சாக்கோட்டை.

எங்கு உள்ளது:

           இந்த கோவில் கும்பகோணத்திற்கு அருகில் சாக்கோட்டை என்ற இடத்தில் உள்ளது.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

            இத்திருக்கோவில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

            இங்குள்ள சிவ பெருமான் பெயர் அமிர்தகதீஸ்வரர் என்றும் அம்பிகை அமிர்தவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஸ்தல வரலாறு:

       முன்னொரு காலத்தில் சிவ பெருமான் ஊழி காலத்தில் உயிர்களை கலசத்தில் அடக்கி ஒரு இடத்தில் சிவ பெருமான் வைத்தார். அப்போது புயல் வந்ததால் அந்த கலசம் இந்த ஊரில் வந்து தங்கியது. கலசம் வந்து தங்கியதால் இந்த ஊர் கடையநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

Image result for kalasam images


கோவில் சிறப்பு:

        இந்த கோவிலில் மாசி மகம் அன்று கும்பகோணம் மஹாமஹம் அன்று மகாமக குளத்தில் காட்சி தருவது சிறப்பு. சிறப்பு   தினங்கள் :

         இந்த கோவில் பிரதோஷம், மாசி மகம், திருக்கார்த்திகை தீபம் முதலியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

வேண்டுதல்கள்:

         இந்த கோவிலுக்கு செய்த பாவங்கள் போக இந்த கோவிலுக்கு மக்கள் அதிகமாக வருகின்றனர்.
பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் அர்ச்சனை செய்தும் அபிஷேகம் செய்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.தெய்வமும் மலர்களும்

தெய்வமும் மலர்களும்


Image result for arali flower imagesமலர்களை கொண்டு வழிபட்டால் கிடைக்கும் நன்மை:

         நாம் மனதார வேண்டி கொள்ளும் போது கடவுளுக்கு புஷ்பங்களை கொண்டு வழிபட்டால் கிடைக்கும் நன்மை அதிகம்.

மலர் நன்மை:

         கடவுளுக்கு வசம் கொண்ட மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நன்மைகள் யாவும் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் இந்த மலர்கள் இறைவனின் திருவடிகளை பற்றிய பின் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
மலர்களை கொண்டு இறைவனுக்கு பூஜை செய்தால் கிடைக்கும் பலனானது நூறு மடங்கு ஆகும். மேலும் இந்த மலரில் அதிகமாக மருத்துவ குணமும் உள்ளது.


Image result for jasmine flowers pictures

எப்போது மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்:

          திங்கள் கிழமைகளில் மல்லிகை, முல்லை கொண்டு இறைவனை அர்ச்சனை செய்தால் எதிரிகள் குறைந்து மனக்கஷ்டங்கள் குறையும் . 
          செவ்வாய் கிழமைகளில் சிகப்பு அரளி, கஸ்தூரி மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கி , ஆயுள் அதிகரிக்கும்.
            புதன் கிழமைகளில் எல்லா மலர் கொண்டும் அர்ச்சனை செய்தால் குழந்தை பேரு கிட்டி , குழந்தைக்கு நல்ல எதிர் காலம் கிடைக்கும். நோய்கள் அத்தனையும் தீரும்.
              வியாழ கிழமை மஞ்சள் நிறத்தில் உள்ள மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் திருமண தடை குழந்தை பாக்கியம் கிட்டி எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
               வெள்ளி கிழமை  மல்லிகை மலர் கொண்டு பூஜை செய்தால் செல்வம் பெருகும் குழந்தை வாழ்வில் இன்பம் பொங்கும்.
                    சனி கிழமை அன்று மனோரஞ்சிதம் என்கிற மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் மன தைரியம் பிறக்கும்.
ஞாயிறு அன்று தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் அமைதி கூடும். ஒற்றுமை நிலவும்.பிரதோஷ விரதமும் அதன் பயன்களும்

பிரதோஷ விரதமும் அதன் பயன்களும்

பிரதோஷ விரதம் இருப்பதால் நடக்கும் நன்மை:

       பிரதோஷ விரதம் என்பது பிரதோஷ நாள் அன்று காலை முதல் மாலை வரை இருக்கும் விரதம் ஆகும். மேலும் இந்த விரதத்தின் போது மனதில் தூய்மை பெற்றிட வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும்.Image result for lingam and nandi
பிரதோஷம் :

      
           பிரதோஷம் என்பது பிற தோஷங்கள், இன்னல்கள் யாவும் நிவர்த்தி என்பது பொருள். பிரதோஷ விரதம் என்பது சிவ பெருமானின் அருள் பூரணமாக கிட்டிட இருக்க வேண்டிய ஒரு முக்கியமான விரதம் ஆகும்.

எப்படி விரதம் இருப்பது:

        பிரதோஷ நாள் அன்று காலை தலைக்கு குளித்து விட்டு சிவ பெருமானை வணங்கி விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். பிறகு காலை முதல் மாலை வரை ஏதும் சாப்பிடாமல் இருந்து மாலை குளித்து விட்டு கோவிலுக்கு சென்று  பிரதோஷ வேளையில் சிவ பெருமானை தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு வந்ததும் எதாவது உண்ண வேண்டும். முதலில் நீர் ஆகாரம் பருகிய பின்னரே சாப்பிட வேண்டும்.

ஏற்படும்நன்மை:

          பிரதோஷ விரதம் இருப்பதால் கடன் தொல்லை, வியாதிகள் விலகும், மனக்குழப்பம் தீரும்.Image result for lingam images


எப்போது ஆரம்பிப்பது :

           பிரதோஷ விரதம் சித்திரை, வைகாசி, கார்த்திகை, ஐப்பசி ஆகி எதாவது ஒரு மாதத்தில் வரும் சனி பிரதோஷம் அன்று தான் ஆரம்பிக்க வேண்டும்.

செய்ய கூடாதது:

           பிரதோஷ காலத்தில் சாப்பிட கூடாது, எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது, விஷ்ணு தரிசனம் செய்ய கூடாது 
திருமண தடை நீங்க வழிபட  வேண்டிய கோவில்  ::  குற்றாலீஸ்வரர் திருக்கோவில்

திருமண தடை நீங்க வழிபட வேண்டிய கோவில் :: குற்றாலீஸ்வரர் திருக்கோவில்


Image result for kutraleeswaran kovil images
குற்றாலீஸ்வரர் திருக்கோவில்


திருமண தடை நீங்க வழிபட  வேண்டிய கோவில் :

       திருமண தடை நீங்கி திருமணம் விரைவில் கைகூடிட வழிபட வேண்டிய கோவில் தான் குற்றாலீஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

           இந்த திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டடத்தில் உள்ள குற்றாலம் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

            இக்கோவிலுக்கு தென் காசியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும் , செங்கோட்டையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்வத்தர்க்கு தென்காசியில் இருந்தும் செங்கோட்டையில் இருந்தும் பேருந்துகள் உள்ளது.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

            இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் குற்றாலநாதர் என்றும் அம்பிகை குழல்வாய் பொழியம்மை என்ற பெயருடன் அழகுற காட்சி தருகின்றனர். 

கோவில் சிறப்பு:

         இந்த கோவிலில் தான் சிவ பெருமான் அகத்திய முனிவருக்கு காட்சி தந்தார் என்பது வரலாறு.

ஸ்தல வரலாறு:

                       கைலாயத்தில் சிவ பெருமானுக்கும் பார்வதிதேவிக்கு திருமணம் நடக்க விருந்து. திருமணத்தை கண்டுகளிக்க அனைவரும் கைலாயத்தில் ஒன்று கூடினர். அப்போது பூமியின் பாரம் தாங்க முடியாமல் வடக்கு திசை கீழும் தெற்கு திசை மேலேயும் போனது. அப்போது அதனை சரி செய்வதற்கு சிவ பெருமான் அகத்திய முனிவரை தெற்கு திசையில் உள்ள பொதிகை மலைக்கு பொய் வருமாறு கூறினார். அகத்தியரே சிவ பெருமானின் திருமண காட்சியை காண வேண்டும் என்று கூறினார். அனால் சிவ பெருமான் பொதிகை மலையில் காட்சி தருவதாக அகத்திய முனிவரிடம் கூறினார். அகத்தியரும் பொதிகை மலைக்கு சென்றார்.

         பொதிகை மலையில் உள்ள ஒரு அருவியில் நீராடி விட்டு அங்கு அருகில் இருக்கும் விஷ்ணு கோவிலுக்கு செல்ல முயன்றார். அகத்தியர் வைணவர் இல்லாததால் அந்த கோவிலுக்கு செல்ல தடை விதித்தது. பிறகு அங்கு உள்ள முருக பெருமான் கோவிலுக்கு சென்று அங்கு முருகரை வழிபாட்டு முருகனிடம் ஆலோசனை கேட்டார். பிறகு முருக பெருமான் வைணவர் வேடம் போட்டு அந்த கோவிலுக்கு செல்லும் படியும் அங்கு தான் சிவ பெருமான் திருமண கோலம் உள்ளது என்றும் கூறினார். 

             அகத்தியரும் முருகர் கூறியவாறே சென்றார். அங்கு உள்ள ஒரு விஷ்ணு பகவானின் தலையில் கை வைத்ததும் அங்குள்ள சிலை சிவ பெருமானை மாறியது. சிவ பெருமானும் திருமண கோலத்தை காட்சி தந்தார். அகத்தியர் சிலையை சிவ பெருமானாக மாற்றியதால் அருகில் இருந்த ஸ்ரீதேவி பார்வதி தேவி யாகவும் பூதேவி பராசக்தியாகவும் மாறியதாக வரலாறு கூறுகிறது. அகத்தியர் பதித்த கை விரைகள் இன்றும் சிவ பெருமான் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு:

         இந்த கோவிலில் விநாயகர், முருகர், சப்தகன்னியர், லிகோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். 

பாவம் போகும் தீர்த்தம்:
          இந்த கோவிலில் வடவருவி என்பது பாவங்களை போக்கும் தீர்த்தமாக உள்ளது. இந்த குளத்தில் நீராடினால் பாவங்கள் அணிவதும் கழுநீராக வெளியேறும் என்பது ஐதீகம்.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

          இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷமாக உள்ளது பலா மரம் மற்றும் திருக்குள தீர்த்தம் சிவமதுகங்கை ஆகும். மேலும் இந்த கோவிலில் உள்ள பலா மரத்தில் உள்ள பலா சுளைகள் அனைத்தும் லிங்க வடிவில் உள்ளது மிக சிறப்பாக உள்ளது.

விஷேஷ தினங்கள்:

             இந்த கோவிலில் பிரதோஷம், மாசி மகம் தை பூசம் ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


தீபங்களும் அதன் பயன்களும்

 தீபங்கள் ஏற்றுவதால் வரும் நன்மைகள் :

        தீபங்கள் ஏற்றுவதால் வரும் நன்மைகள் பல உண்டு. மேலும் இந்த தீபங்கள் ஏற்றி வாழ்வில்  இன்பம் பெறலாம். மேலும் இந்த தீபங்கள் ஏற்றுவதன் மூலம் சில பரிகாரங்கள் செய்த பலனும் உண்டு.


Image result for agal vilakku images
தீப மகிமை:

        எரியும் ஜோதியில் உள்ள காட்சி தருவதாக கிருஷ்ணன் பகவத் கீதையில் கூறியுள்ளார். மேலும் ஒருவர் தனது உயிருக்கு  போராடி கொண்டு இருக்கும் போது கருவறையில் ஏற்றப்படும் தீப ஒளி அவரின் உயிரை காப்பாற்றும் என்பது ஐதீகம்.

         அணைய போகும் தீபத்தை ஒரு எலி அந்த திரியை தூண்டி விட்டத்தால் அந்த எலியானது மஹாபலி சக்ரவர்த்தியாக பிறந்தது என்று வேதாரண்யம் கோவில் வரலாறு கூறுகின்றது.

எளிய தீப பரிகாரங்கள்:

        கோவில்களில் ஒருவரின் ஜாதகத்தில் கிரக தோஷம் இருந்தால் அவர்கள் கோவில்களில் சென்று தீபம் ஏற்றி வழிபட்டால் கிரக தோஷம் படி படியாக குறையும் என்பது ஐதீகம்.

எப்போது ஏற்றுவது:

         கோவிலில் தீபம் ஏற்ற மிகுந்த தருணம் என்பது அதிகாலை அல்லது நற்பகல் எனப்படும் உச்சிவேளை அல்லது சந்தியாகாலம் இந்த மூன்றில் எதாவது ஒரு பொழுதில் விளக்கு ஏற்றினால் துன்பங்கள் யாவும் விலகும் .

நெய்தீபம்:
Image result for neivilakku

          ஒருவரின் வாழ்க்வஹில் அதிகமாக கடும் பிரச்சனைகளை கொண்டு இருந்தால் அவர்கள் ணெய் தீபத்தினை கோவில் கருவரையில் உள்ள விளக்கினில் அந்த நெய்யினை ஊற்றினால் துன்பங்கள் யாவும் தீரும் . மேலும் அந்த ஜோதியில் ஊற்றப்படும் நெய்யானது உயிருக்கு போராடுபவரை கூட காப்பாற்றும் என்பது ஐதீகம்.

செல்வம் செழிக்க:

         செல்வம் செழிக்க வீட்டில் தினமும் தீபம் ஏற்றுவது மிக நன்மை பயக்கும். மேலும் வீட்டில் தினமும் அதிகாலை நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் அதேபோல் மாலை ஐந்து முப்பது மணி முதல் ஆறு மணிக்குள் விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வம் செழிக்கும்.விளக்கு சுத்தப்படுத்தும் முறை:

           விளக்கினை முதல் சுத்தம் செய்த பின்னரே தீபம் ஏற்ற வேண்டும். விளக்கினை செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் தேய்க்க கூடாது. ஞாயிறு , திங்கள், சனி, வியாழ கிழமைகளில் மட்டும் தான் விளக்கு தேய்க்க வேண்டும். தேய்க்கும் நேரமும் இரவு நேரங்களில் தேய்க்க கூடாது. சுத்தமான நீர் கொண்டு தான் விளக்கு தேய்க்க வேண்டும். 

            விளக்கு தேய்த்த பின் விளக்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து விளக்கிற்கு ஏற்றாப்போல் ஒரு தாம்பாளத்தில் அட்சதை இட்டு அதில் ஒரு ருபாய் நாணயத்திற் வைத்து அதற்கும் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும் பிறகு அதன்  மேல் விளக்கு வைத்து அந்த விளக்கில் எண்ணயோ அல்லது நெய்யோ ஊற்றிய பின் தான் திரி போட வேண்டும். வெறும் விளக்கில் திரி போட கூடாது .

விளக்கின் பயன்:

        மண் விளக்கினால் தீபம் ஏற்றினால் எல்லா வளமும் கிட்டும்.
        வெண்கல விளக்கினால் தீபம் ஏற்ற அனைத்து தோஷங்களும் விலகும்.
பித்தளை விளக்கினால் தீபம் ஏற்ற குடுப்பத்தில் ஒற்றுமை நிலவும்.
 செப்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் மனதில் நிம்மதி பொங்கும்.
வெள்ளி விளக்கினால் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
தங்க விளக்கினால் தீபம் ஏற்றினால் ஆயுள் கூடும்.
நவரத்தினம் கொண்டு விளக்கு ஏற்றினால் நவகிரஹ தோஷம் போகும்.
எதை கொண்டு விளக்கு ஏற்றுவது:
        நெய் கொண்டு விளக்கு ஏற்றினால் வீட்டில் எல்லா வளமும் நன்மையும் கிட்டும்.
நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பம் தீரும். எல்லா பரிகாரங்களும் நல்லது.
விளக்கெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் தேவர்கள் அனுகூலம், வசியம், குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை கிட்டும்.
கடலை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற தரித்திரம் அதிகரிக்கும்.
இலுப்ப எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற கடன் தொல்லை நீங்கி சிவ பெருமான் அருள் கிட்டும்.
தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற குலதெய்வ கடாக்ஷம் மற்றும் கணவன் மனைவியின் இடையே ஒற்றுமை நிலவும்.
பஞ்ச தீபம் எனப்படும் ஐந்து வகை தீபம் கொண்டு விளக்கு ஏற்றினால்  வாழ்வில் சகல விதமான  நன்மைகளும் கிட்டும் .மேலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் உள்ள பலன் கொடுக்கும்.
வெப்ப எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற கூடாது.

கோவில்களில் செய்யும் பரிகார தீபங்கள்:

 ராகு தோஷம் 21 தீபங்கள்
சனி தோஷம் 9 தீபங்கள்
குரு தோஷம் 33 தீபங்கள்
துர்க்கைக்கு 9 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள்
திருமண தோஷம் 21 தீபங்கள்
புத்திர தோஷம் 51 தீபங்கள்
சர்ப தோஷம் 48 தீபங்கள்
காலசர்ப தோஷம் 21 தீபங்கள்
களத்திரதோஷம் 108 தீபங்கள்


துன்பங்கள் யாவும் தீர வழிபட வேண்டிய கோவில் :: சிவலோகநாதர் கோவில்

துன்பங்கள் யாவும் தீர வழிபட வேண்டிய கோவில்:

         துன்பங்கள் விலகி வாழிவில் வெற்றி பெற வழிபட வேண்டிய கோவில் தான் சிவலோகநாதர் கோவில்.

எங்கு உள்ளது:

         இந்த கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருமுண்டீஸ்வரம் என்று முன் அழைக்கப்பட்ட கிராமம் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

         இக்கோவிலுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருவெண்ணைநல்லூர் என்ற பேருந்தில் ஏறி கிராமம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறுக்கினால்  விரைவில் இந்த கோவிலை அடையலாம்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

        இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் சிவலோகநாதர் என்றும் அம்பிகை சௌந்தர்யா நாயகி என்ற பெயருடனும் அம்போடு அழைக்கப்படுகின்றனர்.

கோவில் சிறப்பு:

          துன்பங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் இன்பம் நிலைத்திட இந்த கோவிலுக்கு அதிகம் பக்தர்கள் வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:
           
      முன்னொரு காலத்தில் துவாபர யுகத்தில் அப்போது அந்த ஊரினை ஆண்ட சொக்கலிங்கம் என்ற அரசர் இந்த கோவில் வழியே வேட்டை ஆட செல்லும் போது கோவிலின் குளத்தில் ஒரு அழகிய தாமரை மலரினை கண்டான். அதனை பறிக்க தனது வேலை ஆட்களை பறித்து வரும்படி கூறினான். ஆனால் அவர்களால் அந்த தாமரை மலரை பறிக்க முடியவில்லை . உடனே அரசரே இங்கு வந்து அந்த மலரினை பறிக்க வந்தார். ஆனால் அந்த அரசராலும் அந்த  மலரை பறிக்க முடியவில்லை .

         உடனே அந்த தாமரை மலரை அம்பு போட்டு பறிக்க முயன்று அம்பினை குறிபார்த்து தாமரை மலர் மேல் விட்டான். பிறகு அந்த அம்பு பட்டவுடன் குளத்தில் உள்ள நீர் அனைத்தும் செம்மையாக மாறியது. இதனை கண்டு பயந்த மன்னர் தாமரை மலரை எடுத்து பார்த்த உடன் அதில் ஒரு சிவ லிங்கம் இருப்பதை கண்டு அந்த லிங்கத்தை  குளற்றங்கரையில்  வைத்தார்.இப்போதும் சிவ பெருமான் மீது அந்த அம்பு பட்ட தழும்பு உள்ளது.

கோவில் அமைப்பு :

       இந்த கோவிலில் விநாயகர், முருகர், துர்க்கை, சூரியன் , சந்திரன் மற்றும் பைரவர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

        இந்த கோவிலில் உள்ள விருக்ஷமாக  வன்னி மரமும் திருக்குள தீர்த்தமாக  பிரம்மா தீர்த்தம் எனப்படும் முண்டக தீர்த்தம் உள்ளது.

வேண்டுதல்கள்: 

       இக்கோவிலில் பக்தர்கள் அவர்களின் துன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் நிலைத்திட அதிகமாக வெடி கொள்கின்றனர். மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் அர்ச்சனை செய்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.


மனநிலை சரியில்லாதவர்கள் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில் :: மஹாலிங்கஸ்வாமி திருக்கோவில்.

      மனநிலை சரியில்லாதவர்கள் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் 
உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில்:
       மனநிலை சரியில்லாதவர்களும் பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்களும்
 வழிபட வேண்டிய கோவில் தான் மஹாலிங்கஸ்வாமி திருக்கோவில்.

எங்கு உள்ளது:

       இந்த கோவில் கும்பகோணத்தில் சுமார் எட்டு கிலோ மீட்டர் 
தொலைவில் உள்ளது. 

எப்படி செல்வது:

           கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து மாயவரம் செல்லும் 
பேருந்தில் ஏறி திருவிடைமருதூர் என்ற ஊரில் இந்த கோவில் உள்ளது.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

           இந்த கோவிலில் உள்ள சிவ   பெருமான் மஹாலிங்கஸ்வாமி என்றும்
 அம்பிகை பிருஹத் சுந்தராகுஜாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.

நடை திறந்திருக்கும் நேரம்:

             இந்த கோவில் காலை ஐந்து மணி முதல் ஒரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் சிறப்பு:

              இந்த கோவிலில் வந்து வழிபட்டால் மனநிலை சரியாகிவிடும் 
என்பது ஐதீகம்.

 ஸ்தல வரலாறு:

         முன்னொரு காலத்தில் இந்த ஊரினை ஆட்சி புரிந்த அரசர் ஒருவர் இந்த வழியே குதிரையில்  வந்து கொண்டு இருந்தார் . அப்போது ஒரு மரத்தின் அடியில் பிராம்மணர் ஒருவர் அசந்து தூங்கி கொண்டு இருந்தார். அவரை அறியாது அந்த குதிரை பிராமணரை மிதித்து சென்றது. அதனால் அந்த பிராமணர் இறந்தார். அதனை அறியாமல் அரசர் சென்றார். அதனால் பிரம்மஹத்தி தோஷம் பற்றி கொண்டது.

          அரசரை பின் தொடர்ந்த பிரம்மஹத்தி விடாமல் துரத்தி கொண்டு வந்தது .  பிறகு அரசன் கோவிலின் முன் வாசல் வழியே சென்று பின் வாசல் வழியே தப்பிவிட்டார். பிரம்மஹத்தியோ அரசர் வருவார் என வாசலிலேயே காத்து கொண்டு இருந்தது.  இன்னமும் காத்து கொண்டு இருக்கிறது என்பது ஐதீகம்.

கோவில் பெருமை:

      இந்த கோவிலில் உள்ள மிக பெரிய நந்தி வளர்ந்து வருவதால் அதன் தலையில் ஆணி அடித்து அதன் வளர்ச்சியை குறைத்துள்ளனர் என்பது வரலாறு.

கோவில் அமைப்பு:

       இந்த கோவிலில் நவகிரகம், பைரவர், சண்டீஸ்வரர், துர்க்கை ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

ஊர் பெயர் காரணம்:

            மருத மரத்தின் நடுவில் உரோமச முனிவருக்கு சிவ பெருமான் ஒளி வடிவில் காட்சி தந்ததால் இடைமருதூர் என்ற பெயர் கொண்டது. அது இப்போது மருவி திருவிடைமருதூர் என்ற பெயர் கொண்டது.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

            இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக மருத மரமும் திருக்குளமாக காருண்யாமிருத தீர்த்தமும் உள்ளது.

விஷேஷ தினங்கள்:

                தைப்பூசத்தில் பத்து நாட்கள் உற்சவமும், வைகாசியில் பத்து நாள் உற்சவமும் , பிரதோஷம், மாசி மகம் ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

வேண்டுதல்கள்:

             இங்கு மனநிலை சரியில்லாதவர்களுக்கு அதிகமாக பக்தர்கள் வேண்டி கொள்கின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்தும் தீபம் ஏற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.சுக்கிர தோஷம் மற்றும் செல்வ வளம் பெறுக வழிபட வேண்டிய கோவில் :: பக்தஜனேஸ்வரர் கோவில்

சுக்கிர தோஷம் மற்றும் செல்வ வளம் பெறுக வழிபட வேண்டிய கோவில்:

             ஜாதகத்தில் சுக்கிர தோஷம் நிவர்த்தியாகவும் செல்வ வளம் செழிக்கவும் வழிபட வேண்டிய கோவில் தான் பக்தஜனேஸ்வரர் கோவில்.

எங்கு உள்ளது:

           இந்த திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் என்ற இடத்தில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

              இக்கோவில் காலை ஆறு மணி முதல்  பதினோரு மணி   வரையிலும் அதேபோல்  மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி  மற்றும் அம்பாள் பெயர்:

              இந்த கோவிலில் உள்ள  சிவ பெருமான் திருநாவாலீஸ்வரர் என்றும்  அம்பிகை மனோன்மணியம்பிகை என்றும் சிறப்புற அழைக்கப்படுகின்றனர்.

தல  சிறப்பு:

        இந்த கோவிலில் சுக்கிரன் வழிபட்ட .தலம் ஆகும். சுந்தரர் பிறந்த ஊர் ஆகும். மேலும் இந்த ஊரில் தான் சண்டீகேஸ்வரர்  தனது பதவியினை பெற்ற தலம் ஆகும்.

ஸ்தல வரலாறு:
                முன்னொரு காலத்தில் இந்த ஊரில் சிவப்பிரியர் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாடு மேய்த்து கொண்டு இருந்தனர். சிவப்பிரருக்கு சிவபெருமான் என்றால் அளவுகடந்த பக்தி .  அவர் தினமும் மாடு மேய்க்கும் போது ஒரு அடர்ந்த காட்டில் ஒரு இடத்தில் மாட்டில் இருந்து பால் கறந்து அந்த பாலினை கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாய் கொண்டிருந்தார். இதனால் கன்று குட்டிகளுக்கு பால் இல்லாமல் இருந்தது.  சிவபிரியனிடம் சேர்ந்து மாடு மேய்க்கும் சிலர் அவன் தந்தையிடம் கூறிவிட்டனர்.
       
           ஆனால் சிவப்பிரியனின் தந்தை அவர் கூறியதை மறுத்து தான் பிள்ளை அவ்வாறு செய்ய மாட்டான் என்று கூறினார். சிவப்பிரியனின் தந்தைக்கு சந்தேகம் வரவே உடனே சிவபிரியனை பின்தொடர்ந்தார். சிவப்பிரியனும் அந்த இடத்தில் வந்து வழக்கம்போல் மாட்டில் பால் கறந்து சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்ய தயாரானார். அப்போது அவன் தந்தை அதனை கண்டு சிவ பிரியனை அடித்து கறந்து வைத்த பாலினை காலால் எட்டி உடைத்தார். அதனை கண்டு சிவப்பிரியர் என் சிவபெருமானுக்கு வைத்த பாலினை எட்டி உதைத்தாய் என்று கோபமுற்று பக்கத்தில் இருந்த அரிவாளை கொண்டு எறிந்தார். அது அவர் தந்தையின் காலை வெட்டி கால் துண்டானது.

            பிறகு சிவப்பிரியனின் பக்தியை கண்ட சிவ பெருமான் அவருக்கு காட்சி அளித்து சண்டீகேஸ்வரர் பதவியை கொடுத்தார்.

சுக்கிரன் வழிபட்ட லிங்கம்:

       ஒருமுறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து அதனை வணங்கி  வந்தார்.அவரது  உண்மையான பக்தியை கண்ட சிவ பெருமான் அவரது பக்தியில் விழுந்து அவர் முன் தோன்றி  சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி கொடுத்தார். சஞ்சீவினி மந்திரம் என்பது இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு மந்திரம் ஆகும். அதனை சுக்கிர பகவானுக்கு சொல்லி கொடுத்தார். இதனை அறிந்த அரக்கர்கள் சுக்கிரனை அழைத்து சுக்கிரனை தங்களது குருவாக நியமித்தனர். தேவர்களுக்கும் அரக்கர்களுக்கு பகை மற்றும் சண்டை ஆரம்பமானது. தேவர்கள் அரக்கர்களை அழித்தனர். அழித்த அரக்கர்கள் அனைவருக்கும் சுக்கிரன் உயிர் கொடுத்தார்.

          இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த தேவர்கள் சிவ பெருமானிடம் முறையிட்டனர். சிவ பெருமான் சுக்கிரனை அழைத்து அவனை விழுங்கி விட்டார். சிவ பெருமானின் வயிற்றில் சில காலம் தவம் செய்தார். பிறகு சுக்கிர பகவானை வெளியில் அழைத்து அவருக்கு நவகிரஹத்தில் ஒரு பதவியை கொடுத்தது இந்த பூலோகத்தில் மக்கள் செய்யும்  பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல் செல்வம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.  

கோவில் சிறப்பு:

      இந்த கோவிலில் சிவ பெருமானிடம் முறையிட்டால் செல்வ செழிப்பு வரும் என்பது ஐதீகம். மேலும் சுக்கிர தோஷம் நீங்கும்.

கோவில் அமைப்பு:

       இக்கோவிலில் சிவ பெருமான் , நந்திகேஸ்வரர் ,  சூரியன், துர்க்கை நவகிரகம் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

         இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷம் நாவல் மரம் திருக்குள தீர்த்தம் கோமுகி தீர்த்தம் 

விஷேஷ தினங்கள்:

           இக்கோவிலில் பிரதோஷம், திருக்கார்த்திகை தீபம், மாசி மாகம் முதலியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

வேண்டுதல்கள்:

          இந்த கோவிலில் செல்வம் செழிக்க மற்றும் சுக்கிர தோஷம் நீங்க பக்தர்கள் அதிகம் வருகின்றனர். மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் மூன்று மஞ்சள் மற்றும் மூன்று எலுமிச்சைப்பழம் கொண்டு தீபம் ஏற்றி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.

நடனத்தில் சிறந்து விளங்கவும் குடும்பத்தில் ஒற்றுமை கூடவும் வழிபட வேண்டிய கோவில் :: வடாரண்யேஸ்வரர் கோவில்.

நடனத்தில் சிறந்து விளங்கவும் குடும்பத்தில் ஒற்றுமை கூடவும் வழிபட வேண்டிய கோவில் ::

         நடன கலை பயில்பவர்கள் நடனத்தில் சிறந்து விளங்குவதற்கு குடும்ப சூழலில் ஒற்றுமை நிலவவும் வழிபட வேண்டிய கோவில் தான்  வடாரண்யேஸ்வரர்  கோவில்.

எங்கு உள்ளது:

          இந்த திருக்கோவில் திருவள்ளூர்  மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு என்ற ஊரில் உளள்து.

நடை திறந்திருக்கும் நேரம்:

        இக்கோவில் காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி  மற்றும் அம்பாள் பெயர்:

            இந்த கோவிலில் உள்ள  சிவ பெருமான் வடாரண்யேஸ்வரர் என்றும் அம்பாள் வண்டார்குழலி என்ற  பெயருடன் அழகுற காட்சி தருகிறார்கள்.

கோவில்   சிறப்பு:       

      இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான்  சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். மேலும் இந்த கோவில்  பாடல் பெற்ற திருத்தலமாகும் .  மேலும் இந்த கோவில் சக்தி பீடத்தில் காளி பீடம் ஆகும்.

ஸ்தல வரலாறு:

          முன்னொரு காலத்தில் உள்ள சும்பன் நிசும்பன் என்ற இரு அசுரர்கள் முனிவர்கள் , தேவர்கள் ஆகியோரை மிகவும் துன்புறுத்தி வந்தனர். இதனை தாங்க முடியாமல் அவர்கள் அனைவரும் சிவனிடமும் பார்வதியிடமும் முறையிட்டனர். ஆதலால் பார்வதி தேவி தன்னுடைய சக்தியை கொண்டு காளி ஒன்றை உருவாக்கி அதனை கண்டு சும்பன் நிசும்பனை அழிக்க ஆணையிட்டாள் . காளியும் சும்பன் நிசும்பனை வாதம் செய்யும் போது அவர்களிடம் இருந்த ரத்தத்தை  குடித்து கோரமாக மாறினாள் . 

           பிறகு அந்த காளியை அழிக்க முஞ்சிகேச காற்கூடாக முனிவர்சிவ பெருமானிடம் முறையிட்டு காளி தேவியை அழிக்கும்படி கூறினார். சிவ பெருமானும் காளியை அழிக்க சென்றார். அப்போது காளி  சிவ பெருமானை பார்த்து "நீ என்னுடன் நடனம் ஆடி வென்றால் இந்த ஆலங்காட்டினை ஆளலாம் என்று கூறினாள் . சிவ பெருமானும் ஊர்த்துவ தாண்டவம் ஆடி சிவ பெருமான் அணிந்திருந்த மணியினை கீழே போட்டு அதனை தனது இடது கால் பெருவிரலால் எடுத்து தனது காதில் அணிந்து கொண்டார்."

            காளி அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து இது போன்ற நடனம் தன்னால் ஆட முடியாது என்று உணர்ந்து தந்து தோல்வியினை ஒப்பு கொண்டாள் .

காளிக்கு தந்த வரம்:

        சிவ பெருமான் காளி  தனது தோல்வினை ஒப்பு கொண்டதால் உனக்கு என்னை தவிர வேறு யாரும் சமமாக முடியாது ஆதலால் இங்கு என்னை காண வரும் பக்தர்கள் உன்னை வணங்கிய பின்னரே என்னை வணங்க வேண்டும் அப்போது தான் என்னை வணங்கிய முழு பலன் கிடைக்கும் என்று வரம் அளித்தார்.

கோவில் பெருமை:

         இந்த கோவிலில் சிவ பெருமானை காரைக்கால் அம்மையார் தாமரை மலர் போன்ற வடிவத்தில் சிவ பெருமானை வணங்குவது போன்ற தோற்றம் உள்ளது. 

கோவில் அமைப்பு:

           இந்த கோவிலில்  முருகர், விநாயகர், துர்க்கை, பைரவர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

           இந்த கோவிலில் உள்ள விருக்ஷம் ஆலமரம் மற்றும் இந்த கோவிலில் தீர்த்தமாக முக்தி திருக்குளம் உள்ளது.

விஷேஷ தினங்கள்:

            இந்த கோவிலில் திருவாதிரை மாடத்தில் மூன்று தினங்களும், பங்குனி உத்திரம் உற்சவம் பத்து நாட்களும், பிரதோஷம், திருகார்த்திகை தீபம் மற்றும்  மாசி மகம் ஆகியவை மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது.

குழந்தை பாக்கியம் கிடைக்கவும் , திருமணம் விரைவில் நடக்கவும் வழிபட வேண்டிய கோவில் :: திரியம்பகேஸ்வரர் கோவில்.

குழந்தை பாக்கியம் கிடைக்கவும் , திருமணம் விரைவில் நடக்கவும் வழிபட வேண்டிய கோவில் :: திரியம்பகேஸ்வரர் கோவில்.திருமண தடை நீங்க மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோவில் :: பாதாளேஸ்வரர் திருக்கோவில்

திருமண தடை நீங்க மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோவில்:

        திருமண தடை மற்றும் குழந்தை செல்வம் பெறுக வழிபட வேண்டிய கோவில் தான் பாதாளேஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

          இந்த திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரித்துவாரமங்கலம் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

           இத்திருக்கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பாதையில் அம்மாபேட்டையில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

          இந்த திருக்கோவில் காலை  எட்டு மணி முதல் ஒரு மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

               இந்த ஊரில் உள்ள சிவ பெருமான் பாதாளேஸ்வரர் அல்லது பாதாள வரதர் என்றும் அம்பாள் அலங்கார நாயகி அல்லது அலங்கார வள்ளி என்ற சிறப்பு பெயர் கொண்டும் அழகுற காட்சி தருகின்றனர்.

கோவில் சிறப்பு:

           இக்கோவிலில் சுவாமி மற்றும் அம்பாள் சுயம்பு லிங்கமாக காட்சி தருகின்றனர். மேலும் இந்த கோவிலுக்கு திருமண தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.
             
ஸ்தல வரலாறு :

         ஒரு முறை படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்மா மற்றும் காக்கும் தெய்வமாக இருக்கும் விஷ்ணுவிற்கும் ஒரு போட்டி வந்தது. அதில் தன்னை விட யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. அதனை சிவனிடம் முறையிட்டனர். பிறகு சிவனின் திருமுடியையும், சிவனின் பாதங்களையும்  யார் முதலில் பார்க்கின்றனரோ அவரே பெரியவர் என்ற தீர்ப்பு வந்தது.

             உடனே பிரம்மா அன்ன பறவையை வைத்து கொண்டு திருமுடியினை காண சென்றார். அப்போது சிவனின் முடியில் வைக்கப்பட்டிருந்த தாழம்பூ கீழே விழுந்து கொண்டு இருந்தது. பிறகு பிரம்மா தாழம்பூவிடம் சிவனின் திருமுடியினை பிரம்மா கண்டார் என்று பொய் கூற சொன்னார். தாழம்பூவும் அவ்வாறே செய்தது. பிறகு அதனை அறிந்த சிவ பெருமான் கடும்கோபத்திருக்கு ஆளாகி பிரம்மாவிற்கு எங்கும் கோவில் கட்ட கூடாது என்றும், தாழம்பூ இனிமேல் என் பூஜைக்கு வைக்க கூடாது என்றும் சாபம் கொடுத்தார்.

         விஷ்ணு வராகர் அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவ பெருமானின் திருவடியை காண முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அவர் தான் தோற்றுவிட்டதாக கூறினார். சிவ பெருமானை காண பூமியை குடைந்து வந்த இடமே இந்த திருத்தலம்.

கோவில் பெருமை:

         இந்த கோவிலில் விஷ்ணு தோண்டிய பள்ளம் இன்றளவும் இருக்கிறது  அதனை கல் கொண்டு மூடி உள்ளனர் என்கின்றனர். இந்த கோவலில்  உள்ள உச்சி காலத்தை தரிசித்தால் புண்ணியம் கிட்டும். இந்த கோவிலில் மட்டும் தான் எங்குமே காண கிடைக்காத ஏழு விநாயகர் உள்ளனர்.

கோவில் அமைப்பு:

              இத்திருக்கோவிலில் விநாயகர், முருகர், துர்க்கை ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். மேலும் இந்த கோவிலில் தான் சிவ பெருமான் நவகிரஹங்களுக்கு தலைவனாக இருப்பதால் இந்த கோவிலில் நவகிரகம் கிடையாது.

ஊர் பெயர் காரணம்:

        இந்த ஊரான அரித்துவாரமங்கலம் என்ற ஊருக்குஅரி என்றால் விஷ்ணு என்பதும் துவாரம் என்றால் பாதாளம் என்றும் மங்களம் என்பது ஊரினையும் குறிக்கும்.

விஷேஷ தினங்கள்:

        இந்த கோவிலில் பிரதோஷம், திருவாதிரை, மாசி மகம், அன்னாபிஷேகம் முதலியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஸ்தல விருக்ஷம் மற்றும் திருக்குளம் :

           இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷமாக வன்னி மரமும் திருக்குளமாக பிரம்மா தீர்த்தமும் உள்ளது . இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது ஆகும்.

வேண்டுதல்கள்:

        இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து விளக்கு ஏற்றி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.

சண்டி ஹோமமும் அதன் பயனும் :

சண்டி ஹோமமும் அதன் பயனும் :

சண்டி ஹோமம்:

       சண்டி ஹோமம் என்பது சாண்டி என்ற அம்பாளுக்கு செய்யும் ஒரு விதமான ஹோமம் சண்டி ஹோமம் ஆகும்.

சண்டி ஹோமம் எதற்காக:

          இந்த சண்டி ஹோமம் செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள தரித்திரம் போகவும், விபத்துகள் நடக்காமல் பார்த்து கொள்ளவும் இந்த சண்டி ஹோமத்தினை செயகின்றனர்.

சண்டி தேவி:

  சண்டி தேவி என்பவள் ஒரு பெண் தெய்வம் ஆகும். சாண்டி தேவி என்று அழைக்கப்படுகிறாள். அந்த அம்பிகைக்கு பெண்கள் பூஜை செய்வது என்றால் மிகவும் பிடித்த ஒன்றாகும். மேலும் அனைத்து தெய்வங்களின் சக்தி தொகுப்பே சாண்டி தேவி ஆகும். இந்த சாண்டி அம்பாள் அனைத்து மக்களுக்கும் நன்மை செய்பவளாக இருக்கிறாள். 

சண்டி ஹோமம்: 

        சண்டி ஹோமம் என்பது மிகவும் சக்தி மிகுந்த ஒரு ஹோமம் . ஹோமங்களில் அதிக சக்தி கொண்டது சண்டி ஹோமம். இந்த ஹோமத்தினை செய்வதற்கு  ஒன்பது  புரோகிதர்கள் எனப்படும் வேதம் கற்றவர்கள் தேவை. இந்த ஹோமத்தினை மிகவும் சிரத்தையாக செய்ய வேண்டும்.

ஹோமத்தில் உள்ள மந்திரங்கள்:

       இந்த சண்டி ஹோமத்தில் மொத்தம் பதிமூன்று மந்திரங்கள் உண்டு.  அந்த பதின்மூன்றும் பதிமூன்று குணாதிசயங்களை கொண்டது. இதனை ஒன்பது பேறும் சேர்ந்து உரக்க சொல்ல வேண்டும்.பதிமூன்று அத்தியாயங்கள்         முதலில் 


          விநாயகர் பூஜை     
           அனுக்கைய சங்கல்பம்:
புண்ணியகவஞ்சனம்
கலச சதப்பனம்
கணபதி பூஜை:
புண்ணியகவஜனம்
கோ பூஜை:
சுஹாசினி பூஜை:
தம்பதி பூஜை:
பிரம்மச்சாரி பூஜை
சாண்டி வேள்வி:
பூரண ஹோதி
மகா தீபாராதனை 


இவை அனைத்தும் சண்டி ஹோமத்தில் இடம் பெரும் அத்தியாயங்கள் ஆகும்.

பயன்கள்:

      சண்டி ஹோமத்தினால் குடும்பத்தில் தரித்திரம்  நீங்கும். விபத்துகள் நடக்காமல் தடுக்க முடியும் .

திருமண தடை நீங்க வழிபட வேண்டிய கோவில் :: சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில்.

திருமண தடை நீங்க வழிபட வேண்டிய கோவில் ::
  
        திருமண தடை மற்றும் திருமண வாழ்வில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய கோவில் தான் சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

       இந்த திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மனந்தவிழ்ந்தபுத்தூர் என்ற உள்ளது.

எப்படி செல்வது:

         இந்த திருக்கோவிலுக்கு பண்ருட்டியில் இருந்து நேரடியாகவே பேருந்துகள் உள்ளது. பண்ருட்டி பேருந்தில் ஏறி மனந்தவிழ்ந்தபுத்தூர் என்ற ஊரில் உள்ளது.

நடை திறக்கும் நேரம்:

        இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

          இத்திருக்கோவிலில் உள்ள சிவ பெருமான் சொக்கநாதீஸ்வரர் என்றும் அம்பிகை மீனாட்சி என்ற பெயருடனும் அழைக்கப்படுகின்றனர்.

கோவில் சிறப்பு: 

      இந்த கோவிலில் அதிகமாக திருமணத்தடை நீங்கவும், திருமண வாழ்வில் சிறந்து விளங்கவும்  பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

        முன்னொரு காலத்தில் சடைய நாயனார் , இசைஞாணியார்  இவர்களின் மகன் தான் சுந்தரர். அவருக்கு சடைய நாயனார் வைத்த பெயர் நம்பி ஆரூரர். அவர் சிறு வயதில் இருந்த அழகை கண்டு நரசிம்ம நாயனார் என்ற ஒரு மன்னன் சுந்தரரை தத்தெடுத்து வளர்த்தார். சுந்தரர் வளர்ந்து அவரின் பதினாறாவது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணி சுந்தரரின் பெற்றோராகிய சடைய நாயனார், இசைஞானியார்  அவர்களிடம் அனுமதி பெற்று திருமணம் நிகழ்த்த ஏற்பாடு செய்தார் அரசர். 

       எங்கெங்கோ பெண் தேடி கடைசியில் இந்த புத்தூர் என்ற இந்த ஊரில் சங்கடவி என்ற ஒரு பெண்ணினை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தார் அரசர். சம்பந்தரும் அதற்க்கு சம்மதித்தார். பிறகு அரசர் அகமகிழ்ந்து திருமணம் நடத்த ஊரெங்கிலும் பலத்த ஏற்பாடுகளை செய்தார். யானை மேல் சுந்தரர் ஏறி வலம் வர, முன்னே குதிரை மற்றும் ஆள் அம்பு போன்ற பல ஏற்பாடுகளை செய்து ஊரே விழாக்கோலமாக இருந்தது.

          அரசர் , சுந்தரர் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.  சுந்தரர் யானை மீது அமர்ந்து வளம் வரும் போது ஒரு வயதானவர் சுந்தரர் திருமணத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று ஊரறிய கூறினார்.  சொல்லிக்கொண்டே சுந்தரரை நெருங்கினார். பிறகு அனைவரும் செய்வதறியாது நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த முதியவரோ நீயும் உன் பரம்பரையும் எனக்கே சொந்தம் அப்படி இருக்கும் போது நீ என்னைக் கேட்காமல் எப்படி இந்த திருமணத்திற்கு ஒப்பு கொண்டாய் என்று கூறினார்.

    திருமணத்தில் இருந்த சுந்தரரோ ஏய் முதியவரே உனக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது. நான் உனக்கு அடிமை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கூறினார். அதற்க்கு அந்த முதியவர் ஒரு ஓலை சுவடியை காட்டி உன் தாத்தாவின் அப்பா எனக்கு எழுதி கொடுத்த இந்த ஓலையை காட்டினார். அதை சுந்தரர் படிக்காமல் கிழித்து தீயில் இட்டார்.  அவருடைய ஓலையை சுந்தரர் அக்கினியில் போட்டதால் மிகுந்த கோபத்தில் இருந்த முதியவர் நீ வழக்காடு மன்றத்திற்கு வா என்று கூறிவிட்டு சென்றார்.

     முதியவர் கூறிய வழக்காடு மன்றம் என்பது திருவெண்ணைநல்லூரில் உள்ளது. அங்கு தான் வர சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். அதற்க்கு சுந்தரர் அப்படி என் மேல் ஒரு வழக்கு இருந்தால் இந்த வழக்கினை முடித்த பின்னர் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.பிறகு திருமணம் நின்று போனது. இதனால் மிகவும் மனமுடைந்த பெண் சிவ பெருமானிடம் முறையிட்டார். பிறகு சிவ பெருமான் உன் சொந்த ஊரான புத்தூர்  ஊரிற்கு சென்று தவம் செய்யுமாறும் கூறினார்.
அப்படி அவர் தவம் மேற்கொண்டு சிவ பெருமானின் திருவடிகளை அடைந்தார்.  பிறகு சிவ பெருமானின் கருணையால் பறவை நாச்சியாராகவும் , சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து சுந்தரரையே மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் சிறப்பு:

         இங்குள்ள சிவ பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருளிபாலிப்பது மிகவும் சிறப்பு. மேலும் இந்த திருத்தலம் அகத்தியர் வழிபட்ட திருத்தலம்.

கோவில் அமைப்பு:

         இங்குள்ள பிராகாரத்தில் லிங்கோத்பவர் , பிரம்மா , துர்க்கை ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். மேலும் இங்கு பைரவரும் , சூரியனும் நேர் கோட்டில் அமைந்து இருக்கின்றனர்.

விஷேஷ தினங்கள்:

         பிரதோஷம், மாசி மகம் மற்றும் சோமவார பூஜை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

வேண்டுதல்கள்:

           இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்பு ஸ்வாமிக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்:

            அருள்மிகு பச்சைவாழி அம்மன் திருக்கோவில் உள்ளது.